குஜராத்தில் சர்தார் சரோவர் அணை தண்ணீரை பிற அணைகளுக்கு குழாய் வழியாகவும், நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தியும் திருப்பி விட்டு, பிற பகுதிகளில் நீர்ப்பாசனத்துக்கு வழி செய்யும் ‘சாவ்னி’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அங்கு ஜாம் நகரில் அஜி–3 அணைப்பகுதியில் ‘சாவ்னி’ திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
ஒரு பொத்தானை அழுத்தி, அந்த அணையில் இருந்து அவர் தண்ணீரை திறந்து விட்டார். அப்போது அதைப் படம் பிடிக்கும் ஆர்வத்தில் பத்திரிகை புகைப்படக்காரர்களும், டி.வி. சேனல் கேமராமேன்களும் கீழ்நிலைப்பகுதியில் நின்று கொண்டிருந்தனர். தண்ணீரை திறந்து விடுகிறபோது, நீரோட்டம் அதிகமாக இருக்கும் என்பதையோ, தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு விடுவோம் என்பதையோ அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.
அவர்கள் ஆபத்தை உணராமல் நிற்பதை பிரதமர் நரேந்திர மோடி கவனித்து விட்டார். உடனடியாக அவர், அவர்களை நோக்கி கைதட்டி, உஷார்படுத்தி அங்கிருந்து விலகி வருமாறு செய்து விட்டார். இதனால் தண்ணீரில் அவர்கள் அடித்துச்செல்லப்படாமல், உயிர் பிழைத்தனர்.
பின்னர் அந்த விழாவில் துணை முதல்–மந்திரி நிதின் பட்டேல் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி சமயோசிதமாக செயல்பட்டதால், பத்திரிகை புகைப்படக்காரர்களும், டி.வி. சேனல்களின் கேமராமேன்களும் பெரிய ஆபத்தில் இருந்து தப்பினர் என்பதை சுட்டிக்காட்டினார்.
அப்போது அவர், ‘‘பிரதமர் மட்டும் அவர்களை உஷார்படுத்தி இருக்காவிட்டால், மிகப்பெரிய விபத்து நேர்ந்திருக்கும்’’ என குறிப்பிட்டார். பிரதமரின் சமயோசிதத்தை எண்ணி பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, அங்கிருந்த அனைவரும் பெருமிதப்பட்டனர்.

No comments:
Write comments