ஆஸ்திரேலியாவில் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் குற்றவாளிப்பெண் ஒருவர் செய்தித்தாள்களில் தன்னுடைய அழகான ஃபோட்டோவை பரப்புமாறும் இதுவரை வெளிவந்த புகைப்படத்தில் தான் சோகமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் எமி சார்ஃப் என்ற இளம்பெண் போலீஸ் காவலில் இருந்து தப்பிச்சென்றார். சொத்து வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. தப்பிச்சென்ற அவரை பிடிப்பதற்காக அவருடைய புகைப்படத்தை பத்திரிகைகள், தொலைகாட்சிகள் என அனைத்திலும் வெளியிட்டுள்ளது போலீஸ். இதனை கண்ட அந்த பெண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காவல்துறையினரை பார்த்து "என்னுடைய புகைப்படத்தை மாற்றி வெளியிடுங்கள். அதில் நான் சோகமாக காட்சியளிக்கிறேன். நல்ல புகைப்படத்தை நான் அனுப்பி வைக்கிறேன். அதனை வெளியிடுங்கள்" என கூறி சிரித்த முகத்துடன் இருக்கும் தன்னுடைய புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருக்கிறார்.
எமி சார்ஃபின் இந்த தைரிய செயலை கண்ட சமூக வலைதளத்தின் பயன்படுத்துவர்கள் அதிக லைக் கொடுத்தனர். அவர் பதிவிட்டு சில நிமிடங்களிலேயே லைக் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. தற்போது 64ஆயிரம் லைக்குகளை தாண்டிச்சென்று கொண்டிருக்கிறது அவருடைய பதிவு.

No comments:
Write comments