இஸ்லாமிய மத போதகரான ஜாக்கிர் நாயக் குறித்த விசாரணையின் இறுதி அறிக்கையை மகாராஷ்டிரா உள்துறை அமைச்சகத்திடம் மும்பை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த மாதம் வங்கதேசம் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து இந்தியாவின் பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் சர்ச்சையில் சிக்கினார். வங்கதேச தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி ஜாகிர் நாயக்கின் பேச்சால் கவரப்பட்டவன் என செய்தி வெளியானதும், ஜாகிர் நாயக் தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் எழத்துவங்கியது. இச்சம்பவத்தை தொடர்ந்து இந்திய ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவரை கைது செய்ய வேண்டும் எனவும், அவரது நிறுவனத்திற்கு திடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிவசேனா வலியுறுத்தி வருகிறது.
தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் தாம் மறுப்பதாகவும், இந்திய அரசு கேட்டுக்கொண்டால் எல்லா விதமான விசாரணைகளுக்கும் தாம் தயாராக இருப்பதாகவும், ஆனால் இந்திய அதிகாரிகள் யாரும் தன்னை தொடர்பு கொள்ளவில்லை என ஜாகிர் நாயக் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் மும்பை காவல்துறை ஆணையரிடம் வலியுறுத்தினார். தற்போது அவருடைய பேச்சுக்கள் அனைத்தையும் ஆராய்ந்துவிட்டு தங்களது அறிக்கையை மாநில உள்துறை அமைச்சகத்திடம் மும்பை போலிஸார் சமர்பித்துள்ளனர். இதனை உள்துறை அமைச்சகம் மறு ஆய்வு செய்துவிட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments