Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 30, 2016

நீங்கள் Wi-Fi பயன்படுத்துபவர்களா...?


பொது இடங்களில் உள்ள ‘ஃவைபை’ இண்டர்நெட்டை பயன்படுத்தும் போது மொபைலில் இருந்து திருடப்படும் தகவல்கள் பற்றிய ஆய்வு இந்தியா உட்பட 14 நாடுகளில் நடத்தப்பட்டது. வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது மக்கள் டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்துகின்றனர்.

இந்தியர்கள் தற்போது இருக்கும் நிலையில் 37 சதவீதம் பேருக்கு ஒரு நாள் கூட பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடகங்கள் இல்லாமல் இருந்துவிட முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் தவிப்புக்கு ஆளாகின்றனர்.

வெளிநாடுகளில் ஆங்காங்கே பரவலாக ‘வை-பை ஹாட்ஸ்பாட்டுகள் உள்ளன. இது போன்ற பொது வைபையிலிருந்து லொகேஷன், செல்பி புகைப்படங்கள் போன்றவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வது அவ்வளவு பாதுகாப்பானதல்ல.

சைபர் கிரிமினல்கள் இந்த தகவல்களை திருடுவது எளிதான ஒன்றாகும். இதுபோன்ற இண்டர்நெட்டில் வங்கி பரிமாற்றங்கள், ஆன்லைன் பணப் பரிமாற்றங்களை செய்வதும் நல்லது அல்ல.

இந்நிலையில், வெளிநாடுகளில் சுற்றுலா செல்பவர்களில் இந்தியர்கள் கவனக்குறைவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. பொது இடங்களில் உள்ள வை-பை இண்டர்நெட்டில் சொந்த ரகசிய தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனர். இத்தகைய தகவல்களை சைபர் கிரிமினல்கள் திருடும் ஆபத்து உள்ளது. எனவே வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும்போது வைபை இண்டர்நெட்டை தவிர்ப்பது மிகவும் நல்லது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic