அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்ட் டிரம்பே வரவேண்டும் என தாங்கள் விரும்புவதாகவும், அவரே அமெரிக்காவை சீரழித்து விடுவார் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக ஐ.எஸ் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
எனினும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் ஐ.எஸ் பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழித்துவிடுவேன் என தெரிவித்து வரும் நிலையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் இவ்வாறு டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக பேசியிருப்பது தங்களை இன்னும் அதிகம் பிரபலப்படுத்துவதற்காகவே என வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
இம்மாத துவக்கத்தில் ஐ.எஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் நசீரிடம் இருந்து ஒரு செய்தி வெளியாகியது. அதில் "அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் வரவேண்டும் என நான் அல்லாவிடம் பிராத்திக்கிறேன்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சமூக வலைதளமான டெலிகிராம் மூலம் ஐ.எஸ் ஆதரவாளர் ஒருவன் அனுப்பிய செய்தியில் "வெள்ளை மாளிகைக்கு டிரம்பின் வருகையை நாங்கள் எதிர்பார்கிறோம். என்ன விலை கொடுக்கப்பட்டாலும் இது நடந்தே தீரும்!" என தெரிவித்துள்ளான்.
அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஒழிப்பதில் மிக தீவிரமாக இருப்பதாக செய்திகள் கூறுகிறது. ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டை போட மேலும் 30 ஆயிரம் அமெரிக்க இராணுவ வீரர்களை அனுப்ப தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அவசியப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எதிரக அணுஆயுதத்தை பயன்படுத்துவதற்கும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். அதே சமயம் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தரப்பில் டொனால்ட் டிரம்பே அமெரிக்காவின் அதிபராக வரவேண்டும் என விரும்புகின்றனர். காரணம் டொனால்ட் டிரம்பின் மோசமான கருத்துக்களால அவர் அமெரிக்கர்களை பிரிப்பது மட்டுமல்லாமல் தன் சொந்த நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றுவிடுவார் என நம்புகின்றனர்.

No comments:
Write comments