Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 8, 2016

சிலை கரைப்பின் போது ஆற்றில் மூழ்கி 12 பேர் பலி!


கர்நாடகாவில் வி நாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலையை ஆற்றில் கரைக்கச்சென்றவர்கள் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிவமோகா அருகே உள்ள ஹாடோனஹள்ளி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று சிலை கரைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கிராமத்தை சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் பத்ரா ஆற்றில் படகில் விநாயகர் சிலையுடன் சென்றனர்.

ஆற்றில் சிலையை கரைக்கும்போது திடீரென படகு மூழ்கியது. இதில் படகில் இருந்த அனைவரும் ஆற்றில் மூழ்க தொடங்கினர். இதில் 15 பேர் நீந்தி கரை சேர்ந்தனர். 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை ஒரே ஒரு வாலிபரின் உடல் மட்டும் மீட்கப்பட்டது. மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி கோலாகலத்தில் இருந்து கிராமத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவத்தால் கடும் சோகம் நிலவுகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic