பெல்ஜியம் நாட்டைச்சேர்ந்த ஒரு மாணவி தன்னுடைய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு செமத்தியாக வாங்கி கட்டிக்கொண்டார்.
பெல்ஜியம் நாட்டைச்சேர்ந்த தத்துவவியல் மாணவியான லாரா தன்னுடைய புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பரவ விட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம் அந்த புகைப்படத்தில் கைகளை உயர்த்தியவாரு போஸ் கொடுக்கும் அந்த பெண், தனது அக்குல் முடியை கூட எடுக்காமல் இப்படி போஸ் கொடுத்திருக்கிறார். இதனால் நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ஏண்டி! உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா...? என்கிற ரீதியில் பலரும் சரமாரியாக வசைபாடியுள்ளனர். தற்போது இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அம்மாணவிக்கு பெண் உரிமை ஆர்வலர்கள் முன்வந்து ஆதரவு அளித்துள்ளனர். ஒரு பெண்ணிற்கு புகைப்படம் எடுக்கக்கூட உரிமை இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments:
Write comments