தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 25) மாலை 6 மணி முதல் 27 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் கூறியிருப்பதாவது,
அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவையின் நிறுவனரான வெங்கடேஷ் பண்ணையாரின் 13-வது நினைவு தினத்தையொட்டி அம்மன்புரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் திங்கள்கிழமை (செப்டம்பர் 26) குருபூஜை நடைபெறுகிறது.
கடந்த ஆண்டுகளில் பல்வேறு நினைவு தினங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை கருத்தில் கொண்டு சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு அமைதியை உறுதி செய்யும் வகையிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 25) மாலை 6 மணி முதல் செப்டம்பர் 27 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு காலங்களில் ஊர்வலங்கள் நடத்திடவும், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது என்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்களில் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

No comments:
Write comments