தமிழ் மக்கள் பேரவையின் சார்பில், யாழ்பாணத்தில் இன்று நடைபெற்ற 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
தமிழ் மக்களின் பிரச்சனைகளை உலகிற்கு வெளிப்படுத்தும் விதத்தில், தமிழ் மக்கள் பேரவையின் சார்பாக, பல்வேறு அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளின் ஆதரவுடன் பேரணி நடைபெற்றது. இன்று காலை 9 மணிக்கு யாழ்பாணம் பல்கலைகழகம் அருகில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து துவங்கிய இந்தப் பேரணி யாழ்பாணத்தில் முற்றவெளி மைதானத்தை சென்றடைந்தன.
யாழ்பாணத்தில் பல்கலைகழக முன்பு கொடியை அசைத்து, முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் பேரணியை ஆரம்பித்து வைத்தார். இதில் வடக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
யாழ்பாணத்தில் நகரப் பகுதி வணிகர்கள் தமது நிறுவனங்களை அடைத்து ஆதரவு வழங்கியிருந்தனர். வங்கிகள் தனியார் நிறுவனங்களும் பூட்டப்பட்டிருந்தன. பேரணியின் முடிவில் யாழ்பாணம் முற்றவெளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய பிரமுகர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் உரையாற்றினர்.
எழுக தமிழ் எழுச்சிப் பிரகடனம் வாசிக்கப்பட்டதுடன், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் சிறப்புரை நிகழ்த்தினார். இந்த பேரணி மற்றும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். விடுதலை புலிகளின் காலத்திற்கு பின்னர் யாழ்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய பேரணியாக இது அமைந்திருந்தது.

No comments:
Write comments