சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை தமிழ் அமைப்பினர் முற்றுகையிட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 300க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலை கழகத்தின் கொளத்தூர் மணி , மே 17 அமைப்பின் திருமுருகன் காந்தி, காஞ்சிபுரம் மக்கள் மன்றம், ஆதி தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கர்நாடகவில் தமிழர்கள் தாக்கப்பட்டதர்க்கு காரணமாக மத்திய பாஜக அரசும் ஆர்.எஸ்.எஸ் தான் காரணமாக இருந்ததாகவும் கர்நாடக அரசு காவேரியில் தமிழ்நாட்டிற்க்கு நீர் வழங்கப்பட வேண்டும், ராம்குமார் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர் மோகன்பகவத் மற்றும் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

No comments:
Write comments