Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 20, 2016

ஃபேஸ்புக் சாஃப்ட்வேர் கோடிங்கில் குறை கண்டுபிடித்த இளைஞர்!


சமூக வலைதளங்களின் பட்டியில் முதலிடத்தில் இருப்பது ஃபேஸ்புக் நிறுவனம். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். தனி நபர் தவிர பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய வியாபார விளம்பரங்கள், இரகசிய பரிமாற்றங்கள் என பலவற்றையும் ஃபேஸ்புக் மூலம் செய்து வருகின்றனர்.

கேரள மாநிலத்தைச்சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர் அவ்வளவு பெரிய ஃபேஸ்புக் நிறுவனத்தின் சாஃப்ட்வேரில் குறை ஒன்றை கண்டுபிடித்து அந்நிறுவனத்திற்கு அதனை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த குறையின் மூலமாக யாராவது ஃபேஸ்புக் நிறுவனத்தின் மொத்த சாஃப்ட்வேரையும் முடக்கிவிடலாமாம். இந்த குறையை கண்டுபிடித்து தங்களுக்கு உதவி செய்த அந்த இளைஞருக்கு ஃபேஸ்புக் பரிசுத்தொகை வழங்கியுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் தங்களது சாஃப்ட்வேரில் குறை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தற்போது தவறை சுட்டிக்காட்டிய அருண் குமாருக்கு சுமார் 16 ஆயிரம் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்துள்ளது. இந்திய மதிப்பின் படி சுமார் 10.70 லட்சம் ரூபாயாகும்.

அருண் குமாருக்கு வாழ்த்துக்கள்!

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic