Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 11, 2016

கொசுவைத் தடுக்க 5 லட்சம் நொச்சி செடிகள்: சென்னை மேயர்


கொசு உற்பத்தியை இயற்கையான முறையில் கட்டுப்படுத்துவதற்காக ரூ.35 லட்சம் செலவில் இதுவரை சுமார் 5 லட்சம் நொச்சி செடிகள் நடப்பட்டுள்ளதாகவும், நீர்நிலைபகுதியில் மண் அரிப்பை தடுக்க 6.5 லட்சம் பனை மர விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமிதெரிவித்தார். இதுகுறித்து, சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:
“பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆற்றங்கரை மற்றும் நீர் நிலைகளின் ஓரம் அமைந்துள்ள பகுதிகள், தாழ்வான பகுதிகள் மற்றும்குடிசைப்பகுதிகளில் வாழும் ஏழை, எளிய மக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுக்கு இணங்க 5 லட்சத்து தொண்ணூறு ஆயிரம்எண்ணிக்கையிலான கொசுவலைகள் ரூ.9 கோடியே 87 லட்சம் செலவில் பொது மக்களுக்கு விலையின்றி வழங்கப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியின்பூங்காத்துறை சார்பாக கொசு உற்பத்தியை இயற்கையான முறையில் கட்டுப்படுத்துவதற்காக ரூ.35 லட்சம் செலவில் இதுவரை சுமார் 5 லட்சம் நொச்சிசெடிகள், இவையல்லாது மருத்துவமனைகள், குறிப்பாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும்தனியார் அலுவலகங்களுக்கும் வழங்கப்பட்டு மாநகர் முழுவதும் நொச்சிச்செடிகள் நடப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட நீர்நிலைகள்மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் மண் அரிப்பை தடுப்பதற்காகவும், மற்றும் பல்வேறு பயன்களையுடைய பனை மரங்களை வளர்ப்பதற்காகவும் ஜெயலலிதாவின்உத்தரவுக்கு இணங்க ரூ.21 லட்சம் செலவில் இதுவரை 6.5 லட்சம் எண்ணிக்கையிலான பனை மர விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன.” இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic