தமிழகத்திலும் அனைத்து பள்ளி வாசல்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சென்னையில் பள்ளிவாசல்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்தோடு தொழுகையில் ஈடுபட்டனர். தியாகத் திருநாளான இன்று, ஏழை எளியோருக்கு உணவு அளித்து இஸ்லாமியர்கள் மகிழ்ந்தனர்.
வேலூர், ஆம்பூர், திண்டுக்கல், திருச்சி, கோவை உள்ளிட்ட ஊர்களில் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி சிறப்பு தொழுகைகள் நடத்தினர். டெல்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் ஈத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

No comments:
Write comments