Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 8, 2016

6 மாதத்திற்குள் இலங்கை அதிபர் இறந்துவிடுவார்..! - ஜோசியர்


இலங்கை அதிபர் ஸ்ரீசேனா இன்னும் 6 மாதங்களில் இறந்துவிடுவார் என பிரபல ஜோதிடர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் புகழ்பெற்ற ஜோதிடர் விஜித் ரோஹனவிஜயமுனி ஆவார். அவர் கூறியதாக சொல்லப்படும் ஜோதிடத்தை இலங்கையின் பெரும்பாலான பத்திரிகைகள் வெளியிட்டனர். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, 'இலங்கை அதிபர் ஸ்ரீசேனாவிற்கு ஜாதகம் சரியில்லை. இன்னும் 6 மாதங்களில் அவர் இறந்துவிடுவார் என்றும், அதன்பிறகு மீண்டும் ராஜபக்சேவே அதிபராக ஆவார்' என தெரிவித்திருக்கிறார்.

இந்த கருத்தால் அந்த ஜோதிடருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொழும்பு குற்றபுலனாய்வு அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்துள்ளனர். தான் கூறியது வெறும் கணிப்பே என்றும் எந்த வித விசாரணை குறித்தும் தான் அஞ்சப்போவதில்லை என அவர் தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை சென்றிருந்த போது அவரை துப்பாக்கியின் பின்புறத்தால் தாக்கிய வழக்கில் பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கூறிய இந்த ஜோசிய கணிப்பால பல அரசியல்வாதிகள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் மற்றொரு ஜோசியர் ஸ்ரீசேனா 6 மாதத்திற்குள் இறக்கமாட்டார் என தெரிவித்திருக்கிறார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic