விலங்குகள் நல வாரியத்தின் தூதராக ரஜினியின் இளைய மகளும் இயக்குநருமான செளந்தர்யா, சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதற்குத் தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திரைப்படங்களில் விலங்குகள் தோன்றும் காட்சிகள் குறித்த ஆலோசனைகளை திரைத்துறையினருக்கு செளந்தர்யா வழங்குவார் என்கிற ஆலோசனையுடன் விலங்கு நல வாரியத்தின் தூதராக செளந்தர்யா ரஜினிகாந்த் நியமிக்கப்பட்டார். இதற்குப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் செளந்தர்யா அப்பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. அவருடைய நியமனத்தை எதிர்த்து திருச்சியில் தமிழர் வீரவிளையாட்டுப் பேரவைக் கழகமும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். தமிழ்நாட்டில் ஜல்லிகட்டு நடைபெறுவதைத் தடுத்த விலங்கு நல வாரியத்தின் தூதராக செளந்தர்யா பணியாற்றக்கூடாது. அப்பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். செளந்தர்யாவின் உருவப் படங்களும் எரிக்கப்பட்டன.
தமிழர் வீரவிளையாட்டுப் பேரவையின் தலைவர் ராஜேஷ் இதுபற்றி கூறும்போது: முரட்டுக் காளை படத்தில் காளையை அடக்குவது போல நடித்து, அதனால் கிராமப்புறங்களில் அதிக ரசிகர்களைப் பெற்றார் ரஜினி. தமிழர்களின் ஆதரவுடன் பெரிய நட்சத்திரமான ரஜினியின் மகளான செளந்தர்யா, விலங்கு நல வாரியத்தின் தூதராக நியமிக்கப்பட்டது வருத்தத்துக்கு உரியது. ஏற்றுக்கொள்ளமுடியாதது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இதை ரஜினி வலியுறுத்தவேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் தொடரும் என்று கூறினார்.

No comments:
Write comments