குஜராத் மாநிலம் உனாவில் பசுகாவலர்களால் தாக்கப்பட்ட நான்கு இளைஞர்களும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் பேரணியில் கலந்து கொண்டு உத்திரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.கவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி ஆட்சியை பிடிக்க தலித் சமூகத்தின் வாக்குகளை பெறுவதற்கான தீவிர முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் குஜராத் மாநிலம் உனாவில் பசுகாவலர்களால் தாக்கப்பட்ட நான்கு தலித் இளைஞர்களை இதற்காக பயன்படுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலித் பிரிவான பாரதீய பெளத்த சங் சார்பில் வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி தலை நகர் டெல்லியில் வைத்து பிரச்சார துவக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனை அவ்வமைப்பின் தலைவர் பாந்தே சங்க்ப்ரியா ராகுல் தெரிவித்தார். உத்திரபிரதேசத்தில் இப்பிரச்சார பேரணி 10 முதல் 12 நாட்களுக்கு நடைபெறும் என்றும் அப்பொழுது உனாவில் தாக்கபப்ட்ட தலித் இளைஞர்கள் அதில் பங்கு கொள்வார்கள் என கூறினார். தலித் சமூகத்தினரையும் இந்துத்துவா அடிப்படையில் செயலாற்ற பல்வேறு முயற்சிகளை ஆர்.எஸ்.எஸ் எடுத்துவருகிறது. இந்துக்களின் ஓட்டுக்களை ஒன்றினைக்கவும், கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதை தடுக்கவும் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பேரணிக்கு பா.ஜ.கவின் முன்னாள் மத்திய் அமைச்சர் சத்ய நாராயன் ஜெய்ன் பங்கு கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் இது தொடர்பாக கருத்து தெரிவித்த தலித் இயக்க தலைவர் ஜிக்னேஷ் மேவானி, தலித் சமூக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க முயன்று வருகிறது. உனா இளைஞர்களை நேரில் சந்தித்து இப்பேரணியில் பங்கெடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவோம் என தெரிவித்தார்.
No comments:
Write comments