காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை கேள்விப்பட்ட ஏராளமான அதிமுக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அங்கு குவிய துவங்கினர். இதனால் பாதுகாப்பிற்காக கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
அவரை பார்ப்பதற்கு எந்த நிர்வாகிகளும் அனுமதிக்கப்படவில்லை. அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தற்போது, அவருக்கு காய்ச்சல் குறைந்துவிட்டதாகவும், அவர் பூரண குணமடைந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Write comments