Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 24, 2016

3ஜியில் விட்டதை 4ஜியில் பிடித்துக்கொள்ளுங்கள் மக்களே!


இந்தியாவில் இயங்கிவரும் தொலை தொடர்பு நிறுவனங்களான ஏர்டல் ரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக  3 மாதங்களுக்கு இலவச 4ஜி சேவையை அறிவித்துள்ளது.

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட ஏர்டெல் நிறுவனம் 3ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட இன்டர்நெட் சேவைக்கான ரூபாயை சகட்டுமேனிக்கு கூட்டியது. அத்தோடுமட்டுமல்லாமல் பல சமயங்களிலும் வாடிக்கையாளரின் பணம் காலர் டியூன், மெசேஜ், டேட்டா என பல வழிகளிலும் கொள்ளை அடித்தது. பல வாடிக்கையாளர்கள் இதனால் அதிருப்தி அடைந்தார்கல் என்றே சொல்ல வேண்டும்.

தற்போது ஜியோ சேவையை அம்பானி அறிமுகப்படுத்திய பின்னர் ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு வெகுவாக பாதித்தது. மார்கெட்டை தக்கவைத்துக்கொள்வதற்காக ஜியோ ரிலையன்ஸிற்கு போட்டியாக இலவச சேவையை அள்ளி வழங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்களுக்கு 4ஜி சேவை இலவசம் என்று ஏர்டெல் நிறுவனம் அதிரடி அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஏர்டெல்லின் இந்தியா மற்றும் தெற்கு ஆசிய பிராந்திய செயல் இயக்குனர் அஜய் பூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இந்த சலுகையானது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.1495 என்ற விலையிலும், புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.1494 என்ற விலையிலும் கிடைக்கும்.   

4ஜி வசதி கொண்ட அலைபேசிளை  பயன்படுத்துபவர்கள் அதிக அளவில் இணைய வசதியை பயன்படுத்துவதால், டேட்டா அதிக அளவில் செலவாகும். இவர்களை மனதில் கொண்டுதான் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது தில்லி வட்டத்தில் அறிமுகமாகி உள்ள இந்த திட்டம்  வெகு விரைவில் பிற தொலைத்தொடர்பு வட்டங்களுக்கும் விரிவு செய்யபப்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மக்களே! 3ஜியில் விட்ட காசை 4ஜியில் பிடித்துக்கொள்ளுமாறு அறிவுரை கூறிக்கொள்கிறோம்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic