Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 2, 2016

ஜாகிர் நாயக் நிறுவனத்தின் லைசன்ஸை புதுப்பித்த அதிகாரிகள் சஸ்பெண்ட்!


சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் தொண்டு நிறுவனத்திற்கு லைசென்சை புதுப்பித்த காரணத்திற்காக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் மதபோதனைகள், துபாயை தலைமையிடமாகக் கொண்ட பீஸ் டி. வி. யில் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கிடையே, வங்கதேசத்தில் 22 பேர் கொல்லப்பட்ட டாக்கா தாக்குதலில் தொடர்புடைய இரண்டு தீவிரவாதிகள், மதபோதகர் ஜாகிர்  நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைதளத்தில் பரப்பி இருந்தனர்.

இதனால்,  அவர்கள் ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு  தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, ஜாகிர் நாயக்கின் பேச்சை  ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்கதேச அரசு கேட்டுக் கொண்டது. சர்ச்சைக்குரிய  வகையில் பேசி வருவதால் இந்தியாவில் ஜாகிர் நாயக்கின் மதபோதனைகளை ஒளிபரப்ப  தடை விதிக்கப்பட்டது.

இதன்பின்னர், ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை தொண்டு நிறுவனத்திற்கு எதிராக மகாராஷ்டிர மாநில அரசும், மத்திய உள்துறை அமைச்சகமும் பல்வேறு விசாரணைகளை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், ஜாகிர் நாயக்கின் தொண்டு நிறுவனத்திற்கு, அன்னிய நிதி முறைப்படுத்தும் சட்டத்தின்(எப்சிஆர்ஏ) கீழ் கடந்த 19ம் தேதி லைசென்ஸ் புதுபிக்கப்பட்டிருக்கிறது.

இது பற்றி சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், ஜாகிர் நாயக்கின் தொண்டு நிறுவனத்திற்கு லைசென்சை புதுப்பித்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி ஜி. கே. திரிவேதி மற்றும் 2 துணை செயலாளர்கள், பிரிவு அலுவலர் ஒருவர் என 4 பேரை நேற்று மாலை சஸ்பெண்ட் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.

மத்திய அமைச்சர் ரிஜ்ஜு தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘ஒரு தொண்டு நிறுவனத்தின் மீது விசாரணை நிலுவையில் இருக்கும் போது அதற்கு லைசென்ஸ் புதுப்பிக்கப்படுவதில்லை’’ என்று கூறியுள்ளார். ஜாகிர் நாயக்கிற்கு இங்கிலாந்து, கனடா, மலேசியா நாடுகளில் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic