Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 2, 2016

தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்! வட மாநிலங்கள் முற்றிலும் பாதிப்பு


12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10 தொழிற்சங்கங்கள், பொதுத் துறை வங்கிகள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.

ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யு உள்ளிட்ட 10 தொழிற் சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் பெரும்பாலான மாநிலங்களில் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதுப்பு ஏற்பட்டது.

கர்நாடகா, கேர ளா,புதுச் சேரி, அரியானா உள்பட சில மாநிலங்களில் பஸ்கள், ஆட்டோக்கள் ஓட வில்லை. தமிழ்நாட்டில் இருந்து பெங்களூர் சென்ற பஸ்கள் ஓசூரில் நிறுத்தப் பட்டன. டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் அரசு பஸ்கள் ஓடவில்லை.

ஆனால் டாக்சிகள் இயக்கப்படவில்லை. எல்லா மாநிலங்களிலும் ரெயில் சேவைகள் தங்கு தடையின்றி நடந்தது. இதனால் கோடிக்கணக்கான பயணிகள் நீண்ட தொலைவு பயணத்தை சிரமமின்றி மேற்கொள்ள முடிந்தது.

தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக கோல் இந்தியா எனும் நிலக்கரி நிறுவனம், கெயில், ஓஎன்ஜிசி, என்டிபிசி, ஆயில், ஏச்ஏஎல் மற்றும் பெல் நிறுவனங்களில் உற்பத்தி பணிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆலைகள் மூடப்பட்டன.திருச்சி பெல் நிறுவனத் தில் 90 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லை. விசாகப் பட்டினம் உருக்கு தொழீற் சாலையில் தொழிலாளர்கள் 100 சதவீதம் பணிக்கு வராமல் புறக்கணித்தனர்.

பெங்களூரில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.பெங்களூருவில் வேலைநிறுத்ததால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படாமல் இருக்க பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாலைகளிலும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன.பெங்களூருவில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டன. பேருந்துகள் அனைத்தும் டிப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடைகளும் பெரும்பாலும் மூடியே காணப்படுகின்றன.

உத்திரப்பிரதேசத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் தொழிலாளர் நல மசோதாவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர் வாரனாசியில்  ரோடு வேஸ் தொழிலாளர்கள் போரட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஒடிசாவில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ரயில் நிலையங்களில் பல்வேறு தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பேருந்துகள் ஏதும் இயக்கப்படவில்லை. இருப்பினும் சிலர் வெளியூர்களுக்கு செல்ல பேருந்து நிலையம் வந்திருந்தனர். இதனால் அவர்கள் அவதிக்கு ஆளாகினர்.

சிலிகுரியில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட மேயர் அசோக் பட்டாச்சாரியா உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் நடந்த போராடத்தில் அரசு பஸ்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தபட்டது.

தொழிற்சாலைகளில் பாதிப்பு ஏற்பட்டது போல இன்று வங்கி பணி கள் அனைத்தும் முடங்கின. பொதுத்துறை வங்கி ஊழியர்கள் யாரும் இன்று வேலைக்கு வரவில்லை. இதனால் நாடு முழுவதும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலை பரிவர்த்தனைகள் முடங் கியது.

சில நகரங்களில் ஏ.டி.எம் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. வங்கி ஊழியர்கள் வேலைக்கு வராததால் தனி நபர்களுக்கு வருவாய் இழப்பு- உள்பட பல்வேறு பாதிப்பு ஏற்பட்டது.

வட மாநிலங்களில் அரசு அலுவலகங்களும் இன்று இயங்கவில்லை. இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஓட்டல் கள் உள்பட முக்கிய சேவை நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பெட் ரோல் விற்பனை நிலை யங்கள் மட்டும் திறந்திருந்தன.

மாருதி, ஹோண்டா உள்ளிட்ட கார் தொழிற் சாலைகளிலும் இன்று உற்பத்தி பணிகள் பாதிக் கப்பட்டன. டெல்லி அரு கில் உள்ள மாயாபுரி, குர்கான் சீமாபுரி, பட்பர்கஞ்ச் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற் பேட்டைகள் ஸ்டிரைக்கால் வெறிச்சோடின.

மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வேலைநிறுத்தத்தை 100  சதவீதம் வெற்றி பெற செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் மேற்கு வங்க முதல்&மந்திரி மம்தாபானர்ஜி விடுத்த கடும் எச்சரிக்கை காரண மாக அம்மாநிலத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வில்லை.மேற்கு வங்காளத்தில் இன்று அரசு பஸ்கள் வழக்கம் போல ஓடின. அரசு அலுவலகங்களும் வழக்கம் போல இயங்கின.

கோல் இந்தியா நிறுவன ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட் டாலும் நிலக்கரி, மின் உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic