கேரள மாநிலத்தில் அதுவும் குறிப்பாக கன்னூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அரசியல் மற்றும் அமைப்பு கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இக்கொலைகள் தற்போது கன்னூர் மாவட்டத்தில் சர்வசாதரணமாகிப்போனது.
இன்று சி.பி.எம் கட்சியை சேர்ந்த ஒருவரால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச்சேர்ந்த ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கேரளாவில் சி.பி.எம் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு 3 மாத காலத்திற்குள் நடக்கும் 5வது அரசியல் கொலை இதுவாகும்.
கன்னூர் மாவட்டம் தில்லன்கேரி கிராமத்தைச்சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர் பினேஷை கூர்மையான ஆயுதங்கள் கொண்டு கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தலையில் பலத்த காயமடைந்த பினேஷ் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து முழு பந்திற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. பினேஷ் கொல்லப்படுவதற்கு முன்பாக சி.பி.எம் கட்சியினரை சேர்ந்த ஒருவரை குண்டு வீசி கொல்ல ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் முயற்சித்திருக்கிறார்கள், இதில் பலத்த காயங்களுடன் சிபிஎம் கட்சியினர் தப்பித்திருக்கின்றனர். இதற்கு பழிவாங்கும் விதமாகவே இந்த கொலை நடைபெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த இருபது வருடங்களாகவே கண்ணூரில் சி.பி.எம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரிடையே மோதல் இருந்து வருகிறது. இதுவரைக்கும் இவர்கள் நடத்திய வன்முறை ஆட்டத்தினால் 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு மகாராஷ்டிராவின் நாக்பூர் எப்படி கோட்டையோ அது போல கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் கேரளாவின் கண்ணூர் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. சி.பி.எம் கட்சியினரே இவ்வாறான கொலை குற்றங்களில் ஈடுபட்டுவர அக்கட்சியின் சார்பில் இருக்கும் முதலமைச்சர் பிற கட்சிகள் கொலை செய்வதற்கு பயிற்சி அளிப்பதாக சில நாட்களுக்கு முன் குற்றஞ்சாட்டியது வேடிக்கையாக இருக்கிறது.

No comments:
Write comments