கஷ்மீர் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்காக அம்மாநில முதலமைச்சர் மெஹ்பூபா முப்தி அனைத்து கட்சிகளின் கூட்டத்தை இன்று கூட்டினார். இந்த கூட்டத்திற்கு கஷ்மீரின் ஹூரியத் கவுன்சிலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தில் கலந்த் கொள்ளாது ஹூரியத் கவுன்சில் முற்றிலுமாக புறக்கணித்துள்ளது.
கஷ்மீரில் கடந்த இருமாதங்களாக நிகழ்ந்து வரும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்துவருகிறது. கஷ்மீர் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்காக அம்மாநில முதலமைச்சர் மெஹ்பூபா முப்தி அனைத்து கட்சித்தலைவர்களின் கூட்டத்தை இன்று கூட்டினார். இக்கூட்டத்திற்கு ஹூரியத் கவுன்சிலின் தலைவர் சயீத் அலி ஷா கிலானி மற்றும் மிர்வாஜ் உமர் பாரூக் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இக்கூட்டத்தை ஹூரியத் கவுன்சில் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. அதே போன்று எதிர்கட்சிகளைச்சேர்ந்த 4 எம்.பிக்களும் இக்கூட்டத்தை புறக்கணித்துவிட்டு பிரிவினைவாதிகளை நேரிடையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
சி.பி.எம் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி, சிபிஐ தலைவர் டி.ராஜா, ஜே.டி.யு தலைவர் சரத் யாதவ், ஆர்.ஜே.டி தலைவர் ஜெய் பிரகாஷ் நாராயண் ஆகிய நால்வரும் இக்கூட்டத்தின் பாதியிலேயே கருத்து முரண்பட்டு வெளியேறினர். அதே போன்று வீட்டு காவலில் இருந்து வரும் கிலானியை நேரில் சென்று சந்திப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்னாத் சிங் தயாராக இருந்தபோதும் தான் அவரை சந்திக்க விரும்பவில்லை என கிலானி தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

No comments:
Write comments