மத்திய அமைச்சர் மற்றும் டெல்லியில் உள்ள பிரபல கட்சி தலைவர் ஆகியோரின் ஆதரவில் டெல்லியில் ஒரு பெரிய விபச்சார நெட்வொர்க் செயல்படுவதாக டெல்லி மாநில மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி மகளிர் ஆணையத் தலைவராக செயல்பட்டு வரும் சுவாதி மாலிவால் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த நவீன் ஜெய்ஹிந்த்தின் மனைவி ஆவார். இவர் ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தில் உறுப்பினராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுவாதி மாலிவால், டெல்லியில் பல ஆயிரம் கோடி அளவில் பணம் புரளும் பெரிய விபச்சார நெட்வொர்க் செயல்பட்டு வருவதாகவும் 8 முதல் 10 வயதுக்கு உட்பட்ட இளம் சிறுமிகள் விற்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், அந்த சிறுமிகள் தினமும் கிட்டத்தட்ட 30 ஆண்களுடன் விபச்சாரத்தில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுவதாக கூறியுள்ள அவர், மத்திய அமைச்சர் மற்றும், தேசியக் கட்சி ஒன்றின் தலைவர் ஆகியோரது ஆதரவில் இந்த நெட்வொர்க் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
No comments:
Write comments