நீர் நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டால் என்ன ஆகும் என்பதை கடந்த வருடம் வந்த மழை வெள்ளத்தின் மூலம் சென்னை மற்றும் கடலூர் மக்கள் அனுபவித்து அறிந்து கொண்டார்கள்.
இனி அந்த வரிசையில் திருச்சியும் இணைய துடித்துக்கொண்டு இருக்கிறது. அதெப்படி ஏரியில் மணல் கொட்டி வீடு கட்ட முடியும் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? ஏரியை பட்டா போட்டு விற்றுவிட்டால்? ஆம் திருச்சி மாவட்ட நிர்வாகம் கொட்டப்பட்டு ஏரியை 2008ம் வருடம் பட்டா போட்டு விற்றுவிட்டது. தற்பொழுது, அதை வாங்கியவர்கள் வீடு கட்ட ஏரிக்குள் மண் நிரப்பி சமப்படுத்துகிறார்கள். இப்பொழுது தான் அந்த விஷயம் வெளியே வந்துள்ளது.
இந்த செய்தி கேட்டு களத்தில் இறங்கிய சட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் அந்த பகுதி பொது மக்களை சந்தித்து ஏரியில் மண் கொட்டுவதால் ஏற்படும் பின்விளைவுகளை விளக்கியவுடன், உடனடியாக தண்டோரா போட்டு அனைத்து மக்களுக்கும் இதன் விவரங்கள் பகிரப்பட்டன. உடனடியாக அன்று இரவே 100க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் ஏரியை முற்றுகையிட்டார்கள்.

உடனடியாக வந்த காவல்துறை பட்டா நிலத்தில் வீடு கட்டுவதை தடுக்க தங்களால் முடியாது என்று அறிவித்துவிட்டார்கள். ஆனாலும் பொது மக்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. ஆகவே இன்று ஒரு கண்துடைப்பு அமைதி பேச்சுவார்த்தைக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் நில உரிமையாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விஷயத்தில் சமாதானமாக போவதற்கு எந்த வழியும் இல்லை என்று பொதுமக்கள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்கள். ஏரியில் பட்டா போட்டு விற்ற நிலங்களை அரசு திரும்ப பெற்று உடனடியாக ஏரியை தூர்வாரி மழை நீர் சேகரிப்புக்கு தயாராக வைப்பது மட்டுமே இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வாக அமையும். இந்த தீர்வு ஏற்படும் வரை போராடும் பொது மக்களுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் அனைத்து சட்ட உதவிகளையும் உடனிருந்து செய்து கொடுக்கும் என உறுதி அளிக்கிறோம். இது குறித்து மேலும் விவரங்கள் அறிய, நீங்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய திருச்சி சட்ட பஞ்சாயத்து எண் - 9943556996.
நன்றி: சண்முகநாதன்

No comments:
Write comments