Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 7, 2016

சுவாதி கொலையை வைத்து மதக்கலவரமா...? என்ன சொல்கிறார் திலீபன்?


சென்னை நுங்கம்பாக்கம் இரயில்நிலையத்தில் படுகொலை செய்யப்பட சுவாதி கொலை வழக்கின் உண்மையான குற்றவாளியை அனைவருக்கும் அடையாளம் காட்டுவேன் என திலீபன் மகேந்திரன் என்பவன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேசிய கொடி எரித்த வழக்கில் கைதாகி சிறை சென்று வெளியே வந்த தீலிபன் மகேந்திரன், சுவாதி கொலை வழக்கு பற்றி ஃபேஸ்புக் பக்கத்தில் பல திடுக்கிடும் தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தார். சுவாதி வழக்கில் அவதூறு கிளப்பியதாக இவர் மீது பா.ஜ.க பிரமுகர் கருப்பு முருகானந்தம் கொடுத்த புகாரில் திருவாரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து திலீபன் மகேந்திரன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இன்று  ஜாமீனில் வெளியே வந்தார்.

சிறையிலிருந்த வெளியே வந்த தீலிபன் மகேந்திரன் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளதாவது, என்னுடைய உயிருக்கு 5 லட்சம் விலை வைத்திருந்ததாகவும், அதனால் என்னை பாதுகாக்கும் பொருட்டு,  உயர் பிரிவு பாதுகாப்பில் தான் சிறை பிடித்துள்ளோம் என்று  சொல்லி சிறையில் உள்ள பைத்தியங்களோடு என்னை அடைத்துவிட்டார்கள்.

உடலில் இருந்த எல்லா உடைகளையும் உருவி வெறும் டவுசருடன் நிறுத்தி என்னை கொடுமைப்படுத்தினார்கள்.  இப்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறேன். சுவாதி கொலையில் உண்மைகளை வெளியே சொல்வதினால் ஒரு தேடப்படும் குற்றவாளி கொடுத்த புகாரின் பேரில் என்னை கைது செய்திருக்கிறார்கள்.

நான் சுவாதி வழக்கின் உண்மையான குற்றாவளி யார் என்பதை  கண்டிப்பாக வெளியே கொண்டு வருவேன்.  சுவாதி கொலையை வைத்து மதக்கலவரம் உருவாக்க திட்டமிட்டார்கள்.  உண்மை யை சொன்ன பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டார்கள்.  அந்த பெண் தற்போது ஆப்பிரிக்காவில் இருக்கிறார்’’ என்று கூறியுள்ளான்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic