சவுதி அரேபியாவில் உள்ள பெண்கள் தங்களது வாழ்க்கையில் தங்களுடைய ஆண் துணை (தகப்பன்/கணவர்/சகோதரன்)யின் அனுமதி இல்லாமல் எந்த முடிவையும் எடுக்க முடியாது.
இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கன கட்டுப்பாடுகள் அதிகம். அங்குள்ள பெண்கள் தன்னுடைய வாழ்க்கயில் திருமணம், வேலை போன்ற ஏதாவது ஒரு முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டுமெனில் அவர்களுடைய பாதுகாவலர்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு காரியத்தையும் அவர்களால் செய்ய இயலாது.
தற்போது அங்குள்ள பெண்கள் தங்களுக்கு சுய முடிவு எடுக்கும் உரிமை வேண்டுமென்பதை வலியுறுத்தி சமூக வலைதளமான டுவிட்டர் மூலம் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை வேண்டுமெனவும், தாங்கள் சுயமாக முடிவெடுக்கும் உரிமை வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில் சவுதி அரேபியாவில் ஒரு பெண் தன்னுடைய ஆண் துணையில்லாமல் வெளிநாடுகளுக்கு தனியாக பயணம் செய்யக்கூடாது, ஆண் துணையின் ஒப்புதல் இல்லாமல் தானாக மணமகனை தேர்ந்தெடுத்து திருமணம் செய்ய முடியாது, தகப்பனின் அனுமதியோ இல்லை கணவனின் அனுமதியோ இல்லாமல் ஒரு பெண் வேலைக்கும் செல்ல முடியாது என்ற சட்டங்கள் நடைமுறையில் உள்ளது.
இத்தகைய சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டுமென்றும், பெண்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்படவேண்டுமென வலியுறுத்தி சமூக தளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.


No comments:
Write comments