யோகா சாமியார் பாபா ராம்தேவின் பதாஞ்சலி நிறுவனம் வேகமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்போது சர்வதேச சந்தையை நோக்கி சென்று கொண்டிருக்கும் அந்நிறுவனம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் தனது கிளையை துவங்க இருப்பதாக பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாபாராம்தேவ் கூறியதாவது "பதாஞ்சலி நிறுவனத்தின் கிளைகள் நேபால் மற்றும் வங்கதேசத்தில் ஆகிய நாடுகளில் சமீபத்தில் துவங்கியுள்ளோம். ஏற்கனவே சவுதி அரேபியா உட்பட பல மத்திய கிழக்கு நாடுகளில் எங்களது நிறுவனத்தின் பொருட்கள் மிகவும் பிரபலமடைந்து வருகிறது.
இன்னும் பல ஏழை நாடுகளை குறிவைத்து எங்களது பதாஞ்சலி பொருட்களை விற்பனை செய்ய உள்ளோம். அதிலிருந்து வரும் லாபத்தினை கொண்டு அந்நாட்டை முன்னேற்றுவதற்கான பணிகளை மேற்கொள்வோம். அரசியல் நிலவரத்தை பொறுத்து எங்கள் நிறுவனத்தின் கிளைகளை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் துவக்குவோம். இவ்வாறு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
பதாஞ்சலி நிறுனத்தின் பொருட்கள் அஜர்பைஜான், கனடா போன்ற நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறிய அவர் விரைவில் ஜவுளித்துறையையும் துவங்க இருப்பதாக தெரிவித்தார். மேற்கத்திய நாடுகளில் விற்பக்கப்பட்டும் ஜீன்ஸ் பேண்டுகளுக்கு போட்டியாக முற்றிலும் இந்தியாவில் அதனை இந்தியாவில் தயாரிக்க இருப்பதாக தெரிவித்தார். இதனால் பல இளைஞர்களை கவரப்படுவர் என்றும் கூறினார்.
பதாஞ்சலி நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையை மகாராஷ்டிராவில் 1000 கோடி செலவில் துவக்க இருப்பதாகவும், இது முன்னர் ஹரித்துவாரில் துவங்கப்பட்ட தொழிற்சாலையை விட மிகப்பெரியது என்றும் இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தைச்சேர்ந்தவர்கள் 10,000 முதல் 15,000 பேர் வரை வேலை வாய்ப்பு பெருவார்கள் எனவும் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையை குறிவைத்து தற்போது களத்தில் இயங்கி வரும் பதாஞ்சலி நிறுவனம் முதற்கட்டமாக 50 லட்சம் கோடி செலவில் முதலீடு செய்யவிருப்பதாக பாபா ராம்தேவ் தெரிவித்தார்.

No comments:
Write comments