இந்தியாவைச்சேர்ந்த வாழும் கலை அமைப்பின் நிறுவனம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு இஸ்ரேல் நாட்டின் யூத மனித உரிமை அமைப்பு தனது உயரிய விருதினை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் மனித நேயப்பணிகள், சமூக நல்லிணக்கத்திற்கான சேவைகள் தொடர்பாக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக யூத மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் புதுடெல்லியில் வைத்து நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் இவ்விருது வழங்கப்பட உள்ளதாக இந்தியாவில் சேர்ந்த யூத தலைவர் கூப்பர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் கடந்த பல வருடங்களாக யூதர்களோடு இணைந்து பல்வேறு நலப்பணிகளை செய்துவருவது குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டு ஹிட்லர் எழுதிய நூலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யூதர்களோடு இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்.

No comments:
Write comments