Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 21, 2016

தமிழச்சி சொன்னது உண்மை என நிரூபணம்!


சுவாதி படுகொலை தொடர்பாக பேஸ்புக்கில் பல பதிவுகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வரும் தமிழச்சி மீது காவல்துறையில் புகார் அளிக்க போவதாக மணியின் தந்தை இசக்கி தெரிவித்துள்ளார். இதன் மூலம் மணி என்ற நபர் உள்ளது நிரூபணமாகியுள்ளது.

ராம்குமார் மரணத்தை தொடர்ந்து தமிழச்சி வெளியிட்ட பதிவில், சுவாதியை கொன்றது மணி. அவருடைய தந்தை பெயர் இச்க்கி. நெல்லை மாவட்டத்தில் இருக்கிற முத்தூர் சிவந்திப்பட்டி தான் மணியோட சொந்த ஊர்.

தேவர் பேரணி மாடசாமி என்பவரிடம் மணி வேலை செய்து வருவதாகவும் கருப்பு முருகானந்தத்தின் அடியாள் படையில் மணியும் ஒருவர். மணி தான் சுவாதி கொலை குற்றவாளி என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு வைரலாக பரவ‌, இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சிவந்திப்பட்டியில் உண்மையிலே இசக்கி மகன் மணி என்பவர் உள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், மணியின் தந்தை இசக்கி கூறியதாவது. என் மகன் அப்படிப்பட்ட நபர் இல்லை. இதுபோன்ற பொய்ப்புகாரை எதிர்த்து வழக்கு தொடுக்கப்போவதாகவும், நெல்லை மாவட்ட எஸ்.பி.யிடம் தமிழச்சி மேல் புகார் அளிக்க வழக்கறிஞரிடம் ஆலோசனை நடத்தி வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் தமிழச்சி குறிப்பிட்ட மணி என்ற நபர் உண்மையிலே இருக்கிறார் என்பது உறுதியாகி விட்டது. இந்நிலையில், தன் மீது புகார் அளிக்க போவதாக வந்துள்ள செய்தியையும் தமிழச்சி தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic