தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு தெய்வப்பிறவி என்றும் அவர் உடல்நிலைக்கு எந்த பிரச்சனையும் வராது என அதிமுக எம்.பி விஜிலா சத்யானந்த் கூறியுள்ளார்.
காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் சரியாகிவிட்டதாக கூறினாலும் மூன்றாவது நாளாக மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்ததும் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மருத்துவமனை வளாகம் முன் கூடி வழிபாடுகளை நடத்தினர். ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி பல்வேறு கோவில்களில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக மகளிர் அணி சார்பாக மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் அதிமுக எம்.பி விஜிலா சத்யானந்த் மற்றும் அதிமுக ஊடக தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரார்த்தனை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி., விஜிலா சத்யானந்த்,"ஜெயலலிதா பூரண நலத்துடன் இருக்கிறார்.அவர் உடல்நிலைக்கு ஒன்றும் ஆகாது.அவர் ஒரு தெய்வப்பிறவி.அவருக்கு சில தெய்வீக சக்திகள் உள்ளன.எனவே அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய சி.ஆர். சரஸ்வதி, அம்மா நன்றாக இருக்கிறார்கள். சீக்கிரம் வீட்டிற்கு வருவார்கள் என்று கூறினார். இதேபோல திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன் ஆகியோர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

No comments:
Write comments