Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 24, 2016

சென்னை விமானநிலையத்தில் மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு!


பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கப் பத்தகம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு தமிழக அரசு ரூ. 2 கோடி பரிசுத் தொகை அறிவித்தது.

இந்நிலையில் நேற்றிரவு 9 மணிக்கு மாரியப்பன் சென்னை திரும்பினார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவரை தமிழக இளைஞர் நலன், விளை யாட்டுத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பி.பெஞ்சமின், விளையாட்டுத் துறை அதிகாரிகள், பாராலிம்பிக் சங்க நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் என நூற்றுக்கணக்கானோர் பூங்கொத்துகளை கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் மாரியப்பன் கூறியதாவது:

பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல காரணமாக இருந்த பயிற்சியாளர், எனக்கு ஊக்கமளித்த தாய், சகோதரர்கள், பள்ளி, கல்லூரி ஆசரியர்கள், நிர்வாகத்தினர் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டுக்காக பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது.

எனக்கு ரூ. 2 கோடி பரிசு வழங்கியுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. அடுத்து வரும் 2020, 2024 பாராலிம்பிக் போட்டிகளிலும் தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைப்பதே எனது லட்சியம். இந்த லட்சியத்தை அடைய தமிழக அரசு அறிவித்த பரிசுத் தொகை உதவியாக இருக்கும்.

உடலில் ஏற்படும் குறைபாடுகள் சாதனை படைக்க ஒரு தடையல்ல. மன தைரியத்துடன் முயற்சிகளை மேற்கொண்டால் மாற்றுத் திறனாளிகள் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். பாரா ஒலிம்பிக் போட்டியில் வீரர்கள் பங்கேற்க அதிக முக்கியத்துவமும், ஊக்கமும் அரசு அளிக்க வேண்டும். இவ்வாறு மாரியப்பன் கூறினார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பாண்டியராஜன், பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தமிழகத்துக்கும், நாட்டுக்கும் மாரியப்பன் பெருமை சேர்த்துள்ளார். அவர் கோரிக்கை விடுத்தால் குரூப் 1 நிலையில் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic