அரசு மருத்துவமனையில் சாப்பிட தட்டு இல்லாததால் வெறும் தரையில் நோயாளிகளுக்கு சோறு போட்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் எலும்பு முறிவு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு பல்மதி தேவி என்ற பெண் தன் கை எலும்பு முறிவு பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்த நிலையில் தனக்கு பசிக்கவே அங்குள்ள ஊழியர்களிடம் சாப்பாடு கேட்டுள்ளார்.
முதலில் அதை அலட்சியப்படுத்திய அவர்கள் பின்னர் சாப்பாடு பரிமாற தட்டு இல்லை வெறும் தரையில் போட்டால் சாப்பிடுகிறாயா என கேட்டுள்ளனர். தான் அவமதிக்கப்படுகிறோம் என்பதை கூட உணராத அந்த ஏழை பெண் தரையில் போட்ட சாப்பாட்டை சாப்பிட்டிருக்கிறார்.
இதை பார்த்த அருகில் இருந்த சிலர் அதை படம் பிடித்து இணையத்தில் விட்டுள்ளனர். இந்த கொடும் செயல் பற்றி மருத்துவமனை டீன் ஷெர்வால் கூறுகையில், நாங்கள் நேயாளிகளுக்கு தட்டில் தான் சாப்பாடு தருவோம்.
ஆனால் இந்த குற்றசாட்டை பற்றி விசாரித்து வருகிறோம், இது நிரூபிக்கபட்டால் சம்மந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒடிசாவில் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வழங்காததால் தன் மனைவி சடலத்தை கணவன் தோளில் சுமந்து சென்ற சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Write comments