திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பாணர்ஜி 1998-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து புதியதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. மம்தா பாணர்ஜி முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார்.கடந்த சட்டசபை தேர்தலிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 211 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. அதே போன்று மக்களவை தேர்தலிலும் 32 எம்பி.க்களையும், மாநிலங்களவைவியில் 12 எம்பிக்களையும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தற்போது கொண்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில், குறைந்தபட்சம் 4 மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும் என்பது தேசிய கட்சி அங்கீகாரம் பெறுவதற்கான தகுதிகளில் ஒன்றாகும்.
மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, அருணாசலபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் இருப்பதால், அக்கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், பா.ஜனதா, பகுஜன் சமாஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றை தொடர்ந்து 7-வது தேசிய கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் உருவெடுத்துள்ளது.
No comments:
Write comments