இந்திய இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் முதலில் உடல் எடையை குறைப்பதோடு, தொப்பையை குறைக்க வேண்டுமென அமைச்சகம் கட்டளையிட்டிருக்கிறது.
இராணுவத்தில் உள்ள பல்வேறு பிரிவின் அதிகாரிகளுக்கு, இராணுவ அமைச்சகம் அனுப்பியுள்ள அறிக்கையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
உடல் எடை அதிகரிப்பால், வீரர்கள் மற்றும் அதிகாரிகளால் போர் பயிற்சியில் ஈடுபட முடிவதில்லை. உடற்பயிற்சி இல்லாததால், பலவித நோய்கள் ஏற்பட்டு, இறுதியில் அவர்களின் ஆயுள் காலமும் குறைகிறது. சராசரியை விட அதிக உடல் எடை உடைய வீரர்கள் மற்றும் அதிகாரிகள், தகுந்த உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டின் மூலம், தங்கள் எடையை குறைக்க வேண்டும். ஆண்டுதோறும், அவர்களுடைய உடல் எடையில் ஏற்பட்ட மாற்றத்தை அறிய, புகைப்படமெடுத்து, ஆவணத்துடன் இணைக்க வேண்டும்.
உடல் தகுதி பெறும்வரை, சிறப்பு பணிகளில் அவர்கள் பணியமர்த்தப்பட மாட்டார்கள். சராசரி உடல் எடையை விட, 10 சதவீதத்திற்கும் மேல் அதிகம் இருந்தால், பல்வேறு பிரிவுகளில் பணி அனுபவம் இருந்தாலும், அவர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இராணுவ தளபதி தல்பீர் சிங்கின் தனிப்பட்ட முயற்சியில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; வீரர்கள் சுறுசுறுப்புடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பதை விரும்பும் அவர், தினமும், 10 கி.மீ., துாரம் ஓடுவதாக இராணுவ வீரர்கள் கூறியுள்ளனர்.

No comments:
Write comments