Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 3, 2016

ஜாக்கிஜானுக்கு ஆஸ்கர் விருது...!

ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகர் ஜாக்கிசானுக்கு, சினிமா துறையில் உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்படவுள்ளது.

நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ள ஜாக்கிசான் அவர் நடித்த 30 படங்கள் அவரை அவரே இயக்கி நடித்துள்ளார். அவரது அனைத்து படங்களும் உலகின் அனைத்து பகுதிகளிலும் வெற்றியை தேடித் தந்துள்ளது. வசூலிலும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

சினிமா துறையில் ஜாக்கிசானின் பங்களிப்பை பாராட்டி, அதற்கு மரியாதை செய்யும் விதமாக அவருக்கு ஆஸ்கர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை THE ACADEMY OF MOTION PICTURE ARTS AND SCIENCE அமைப்பு அறிவித்துள்ளது. வரும் நவம்பர் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் விழாவில் ஜாக்கிசானுக்கு இவ்விருது வழங்கப்படும்.

சமீபத்தில், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு சினிமா துறையில் அவரது பங்களிப்பை பாராட்டி, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான 'செவாலியே' விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது. விரவில் நமது உலகநாயகனுக்கும் ஆஸ்கர் விருது கிடைக்கும்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic