விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்திப்பதற்காக ராம்குமாரின் தந்தை பரமசிவம், சகோதரி ரோஸி இருவரும் நேற்று கடலூர் வந்தனர். அங்கு அவர்கள் திருமாவளவனை சந்தித்துப் பேசினர்.
பின்னர் ராம்குமாரின் தந்தை நிருபர்களிடம் பேசும்போது, ‘‘ராம்குமார் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்துவது தொடர்பாக திருமாவளவனைச் சந்திக்க வந்தேன். எனது மகன் ராம்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அதிகாரிகள் அவனை கொலை செய்துவிட்டனர். சிபிஐ விசாரணக்கு உத்தரவிட்டால் தான் எனது மகன் உடலை பெற்றுக்கொள்வேன்’’ என்றார்.
பின்னர் திருமாவளவன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: சுவாதி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த ராம்குமார் , ‘தற்கொலை செய்து கொண்டார்' என்று போலீஸார் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் சாவில் மர்மம் உள்ளது. ராம்குமாரின் சாவு தற்கொலை என்று கூறி சுவாதி கொலையில் உள்ள பின்னணியை மூடி மறைக்க முயல்கின்றனர். ராம்குமாரின் வழக்கறிஞர் கூறும் கருத்துகளை புறம்தள்ள முடியாது. சுவாதி கொலையையும், ராம்குமார் இறந்ததையும் விசாரிக்க சிபிஐ விசாரணை அவசியம் வேண்டும்.
ராம்குமார் இறந்தது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி இல்லாமல் உச்ச நீதிமன்ற நீதிபதிதான் விசாரிக்க வேண்டும். பேரறிவாளன் சமீபத்தில் சிறையில் தாக்கப்பட்டார். இதில் எதிர்பாராமல் பேரறிவாளன் இறந்திருந்தால் அதனையும் தற் கொலை என்று கூறி போலீஸார் மறைத்திருப்பார்கள். இதுபோன்ற சம்பவங்கள் தற்போது சிறையில் அதிகளவில் நடந்து வருகின்றன என்றார்.

No comments:
Write comments