Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 20, 2016

ராம்குமார் தற்கொலை - சிறை அதிகாரிகளிடம் விசாரணை!


புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பதை அறிய, சிறை அதிகாரிகள், கைதிகளிடம் மூன்றரை மணி நேரம் திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தீவிர விசாரணை நடத்தினார்.

சென்னை புழல் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக ராம்குமாரை சிகிச்சைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு வந்தனர். மருத்துவமனையில் ராம்குமாரை ஆய்வு செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புழல் சிறையில் கடும் பாதுகாப்புடன் உள்ள விசாரணை கைதி ஒருவர் எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும் என்று அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சிறையில் கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரணை நடத்த திருவள்ளூர் நீதிமன்ற குற்றவியல் மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி நியமிக்கப்பட்டார். அவர் நேற்று காலை 9.20 மணிக்கு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வந்தார். அங்கு ராம்குமார் மரணமடைந்தார் என்பதை அறிவித்த டாக்டர் மற்றும் பிரேத பரிசோதனை செய்ய உள்ள டாக்டர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். மேலும் ராம்குமாருக்கு எங்கு காயங்கள் உள்ளது என்பதையும் பார்வையிட்டார். அதன்பின் 10.40 மணிக்கு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். காலை 11.20 மணிக்கு புழல் சிறைக்கு மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி வந்தார். பின்னர், சிறை கண்காணிப்பாளர் அன்பழகன், துணை கண்காணிப்பாளர் குமரேசன், ஜெயிலர் ஜெயராமன், சம்பவத்தின் போது பணியில் இருந்த சிறை காவலர் பேச்சிமுத்து, சிறை மருத்துவர் நவீன், ராம்குமாருடன் இருந்த சிறை கைதிகள் வெங்கடேசன், இளங்கோவன் மற்றும் மருத்துவ பணியாளர்கள், எலக்ட்ரீசியன் பணியாளர்கள், ராம்குமார் இருந்த பக்கத்து அறையிலுள்ள கைதிகளிடம் தனித்தனியாக மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில் ராம்குமார் எப்படி இறந்தார்.

சம்பவத்துக்கு முன் யாருடன் அவர் பேசினார். கடைசியாக ராம்குமாரை யார் பார்த்தது. மின் ஒயரை கடித்த பிறகு ராம்குமாரை முதலில் பார்த்தது யார். மின் ஒயர் கடிக்கும் அளவுக்கு ராம்குமாருக்கு எப்படி மின்சார பெட்டி எட்டியது, மின் ஒயரை இழுத்து கடிக்கும் அளவுக்கு ஒயர் நீளமாக இருந்ததா. சிறை வளாகத்தில் ஏன் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சிறைதுறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் கேட்டதாக கூறப்படுகிறது.  இந்த விசாரணை மூன்றரை மணி நேரம் நடந்தது. விசாரணையில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளையும் மாஜிஸ்திரேட் பதிவு செய்தார். பின்னர் மதியம் 2.35 மணி அளவில் சிறை வளாகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையே, ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதுபற்றி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று புழல் பகுதியை சேர்ந்த தேமுதிக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ேடார் புழல் மத்திய சிறையை ேநற்று முற்றுகையிட அம்பேத்கர் சிலையில் இருந்து ஊர்வலமாக வந்தனர். இதனால் புழல் மத்திய சிறை அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தடையை மீறி சிறை வளாகத்திற்குள் நுழைய முயன்ற அனைவரும் போலீசார் கைது செய்தனர். இதனால் நேற்று புழல் மத்திய சிறை அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic