Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 7, 2016

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவில் தலையீடா...?


அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையிடுவதாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பத்திரிகையாளர்களிடத்தில் திங்கள்கிழமை அவர் தெரிவித்ததாவது, அமெரிக்க அதிபர் தேர்தல் நடவடிக்கையில் எதிரி நாடு தலையிடுகிறது. மிகத் தீவிரமான பிரச்னையை நாம் எதிர்நோக்கியுள்ளோம். ஜனநாயகக் கட்சி இணையதளத்தில் அந்த நாடு ஊடுருவியுள்ளது. இந்த நிலையில், ரஷியா மேலும் ஊடுருவலில் ஈடுபட வேண்டும் என்கிற தோனியில் நம் நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றின் வேட்பாளர் கூறி வருகிறார் என்று ஹிலாரி டொனால்ட் டிரம்பையும் குற்றஞ்சாட்டினார்.

தேர்தலில் டிரம்ப்பை வெற்றி பெறச் செய்ய ரஷியா முயற்சி செய்கிறதா என்று கேட்டனர்.இதற்கு பதிலளித்த ஹிலாரி: "குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டதிலிருந்து, இந்த ஊடுருவல் நடவடிக்கை ஆரம்பித்தது என்பது கவனிக்க வேண்டிய விஷயம். ரஷிய அதிபர் புதினின் கொள்கைகளுக்குத் தனது ஆதரவை டொனால்ட் டிரம்ப் வெளியிட்டார் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையிடுகிறது என்கிற புகார் உளவுத் துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. நமது ஜனநாயக முறையிலான தேர்தலில் ரஷியத் தலையீட்டுக்கான வாய்ப்பு உள்ளது என்பது கவலையளிப்பதாக உள்ளது என்று ஹிலாரி கிளிண்டன் கூறினார்.

அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட முயன்று வருவதாக கூறப்படுவது குறித்து அமெரிக்கப் புலனாய்வு மற்றும் உளவுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் அண்மையில் செய்தி வெளியிட்டது. அமெரிக்க தேசிய உளவுப் பிரிவின் இயக்குநர் இந்த விசாரணையை ஒருங்கிணைத்து வருகிறார் என்று அந்த நாளிதழ் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் ஹிலாரி பேசியுள்ளார்.

நாடு முழுவதும் சூறாவளிப் பிரசாரம் மேற்கொள்வதற்காக புதிய போயிங்-737 விமானத்தை ஹிலாரி கிளிண்டன் பயன்படுத்தி வருகிறார். "ஹிலாரி ஃபோர்ஸ் ஒன்' என்று பெயரிடப்பட்ட அந்த‌ விமானத்தில் 40 செய்தியாளர்களை திங்கள்கிழமை நடைபெற்ற சில பிரச்சார‌ கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றார். குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் ஏற்கெனவே ஒரு விமானத்தைப் பயன்படுத்தி வருகிறார். அதற்கு அவர் இட்டுள்ள பெயர் "டிரம்ப் ஃபோர்ஸ் ஒன்' என்பதாகும். மற்றொரு தனி விமானத்தில் செய்தியாளர்களை அவர் அழைத்துச் செல்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினர் வீடு வீடாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். "டிரம்ப்பை ஆதரிக்கும் இந்திய-அமெரிக்கர்கள்' என்ற பெயரில் செயல்பட்டு வரும் இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்திய வம்சாவளியினர் இடையே மட்டுமல்லாமல், பிற அமெரிக்கர்கள் இடையேயும் டிரம்ப்புக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். வீடு வீடாகச் சென்று, டிரம்ப்புக்கு ஆதரவு திரட்டுவதுடன், ஹிலாரியை ஏன் ஆதரிக்கக் கூடாது என்றும் அவர்கள் விளக்கி வருகின்றனர்.அந்த அமைப்பின் தலைவர் ஏ.டி. அமர் நியூஜெர்ஸி மாகாணம், மெர்ஸர் நகரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், வாக்காளர்களை நேரடியாக சந்திப்பதுதான் சிறந்த தேர்தல் பிரச்சார உத்தி. தேர்தல் நடைபெறும் நவம்பர் 8 வரை இந்த முறையில் டிரம்ப்புக்கு ஆதரவு திரட்டுவோம் என்றார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic