Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 7, 2016

பிரிவினைவாதிகள் மீது கடுமைய காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது..! - மத்திய அரசு


கஷ்மீர் விவகாரத்தில் பிரிவினைவாதிகளி மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

டெல்லியில் நேற்று காலை பிரதமர் மோடியை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். அப்போது தனது தலைமையில் கஷ்மீருக்கு 2 நாள் பயணமாக சென்ற அனைத்து கட்சி தலைவர்கள் குழு மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் குறித்து அவர் விரிவாக எடுத்துக் கூறினார். அதேபோல், கஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தளபதி புர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு மாநிலத்தில் தலைதூக்கி உள்ள வன்முறை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றியும் பிரதமரிடம் அவர் விளக்கினார்.

க‌ஷ்மீரில் அமைதி திரும்பச் செய்யும் நடவடிக்கையாக, அனைத்து கட்சி குழு 2 நாட்களுக்கு முன்பு க‌ஷ்மீருக்கு சென்றது. ஆனால், அந்த குழுவை சந்திக்க ஹூரியத் உள்ளிட்ட பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் மறுத்து விட்டனர். இதனால், அனைத்து கட்சி குழுவின் பயணம் தோல்வியில் முடிவடைந்தது.

இதனால், பிரிவினைவாதிகள் மீது மத்திய அரசு கடும் கோபம் அடைந்துள்ளது. மெகபூபா அரசு, பிரிவினைவாதிகளை மென்மையாக அணுகுவதாக கருதும் மத்திய அரசு, அவர்களிடம் கடுமையை காட்டும் வகையில் சில நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, பிரிவினைவாதிகள் வெளிநாடு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சிலரது பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவணங்கள் திரும்பப் பெறப்படும். அரசு செலவில் அவர்கள் அனுபவித்து வரும் பாதுகாப்பு குறைக்கப்படும். அவர்களின் வங்கி கணக்குகள் கண்காணிக்கப்படும். நிலுவையில் உள்ள விசாரணைகள் முடுக்கி விடப்படும். இதன்மூலம், வன்முறையை தூண்டி விடுபவர்களை சும்மா விடமாட்டோம் என்று காட்ட விரும்புகிறது, மத்திய அரசு. இந்த நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடியின் ஒப்புதலையும் மத்திய உள்துறை அமைச்சகம் பெற்று விட்டதாக கூறப்படுகிறது. அப்போது, பிரிவினைவாதிகளிடம் கடுமையைக் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது என்று மோடி கூறியதாக தெரிகிறது.

காஷ்மீருக்கு சென்று திரும்பிய அனைத்து கட்சி குழு, இன்று டெல்லியில் கூடி ஆலோசனை நடத்துகிறது. அதையடுத்து, அரசின் மேல்மட்ட அளவிலான கருத்து பரிமாற்றத்துக்கு பிறகு, மேற்கண்ட நடவடிக்கைகள் பற்றி இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic