Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 17, 2016

காவேரி போய் மகாநதி வந்தது டும்! டும்! டும்!!!


காவேரி நதிநீர் விவகாரத்தில் தமிழகம், கர்நாடகா இடையே தகராறு மூண்டு உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக வழக்கு நடந்தும் இதுவரை இந்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை.

இந்நிலையில் மகாநதி ஆறு நீர் பங்கீடு தொடர்பாக ஒடிசா - சட்டீஸ்கர் மாநிலங்களுக்கிடையே மோதல் வெடித்துள்ளது. இது தொடர்பாக இரு மாநில முதல்வர்களையும் அழைத்து மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங் ஆகியோர் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளனர்.

ஒடிசா அரசிடம் ஆலோசிக்காமல் சட்டீஸ்கர், மகாநதியின் குறுக்கே 8 குறுக்கணைகளை கட்டி உள்ளது. குறுக்கணைகள் மூலம் நீரை தேக்கி வைத்து, தங்களுக்கே போதிய நீர் இல்லை என கூறி வருகிறது. தங்களை கேட்காமல் குறுக்கணைகளை கட்டியதற்கு ஒடிசா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மகாநதி பிரச்னை இருமாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு விவகாரமாக மட்டும் இல்லாமல், பா.ஜ.க‌ - பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே அரசியல் மோதலாகவும் மாறி உள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic