தமிழகத்திற்கு காவேரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் 2-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்திற்கு காவேரியிலிருந்து 10 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் சித்தராமய்யா தலைமையில் பெங்களூருவில் நேற்று அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் சித்தராமையா செய்தியாளர்களிடம், ''காவேரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தினமும் 15 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை மாநில அரசு பின்பற்ற வேண்டும். அதன்படி, கனத்த மனதுடன் காவேரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
அதன்படி, நள்ளிரவு 12 மணியளவில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீரும் திறந்துவிடப்பட்டது. அணைகளில் நீர் திறக்கப்பட்டதை எதிர்த்து கிருஷ்ணராஜசாகர் அணை அருகே கர்நாடக விவசாயிகள் தீப்பந்தங்களை ஏந்தி அணைகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 100 பேரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக துணை இராணுவ படை மற்றும் போலீசார் 1,500 பேர் அப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக பெங்களூருவில் கன்னட அமைப்பினர் இரயில் மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூருவில் இருந்து சென்னை சென்ற சதாப்தி இரயிலை அவர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தமிழகத்திற்கு காவேரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற 9-ம் தேதி கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், செப்டம்பர் 9-ம் தேதி கர்நாடகாவில் தமிழ் சேனல்கள் ஏதும் ஒளிபரப்பப்படாது என கர்நாடக கேபிள் ஆப்பரேட்டர் சங்க தலைவர் பேட்ரிக் ராஜூ அறிவித்துள்ளார். காலை 6 முதல் மாலை 6 மணி வரை தமிழ் சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் 2-வது நாளாக நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக, சென்னை கோயம்பேட்டில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் ஓசூர் வரை இயக்கப்படுகின்றன. இதேபோல், கர்நாடக அரசு பேருந்துகளும் தமிழக எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

No comments:
Write comments