Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 7, 2016

தமிழர்களுக்கான மறுவாழ்வு ஏற்பாடுகளில் திருப்தியில்லை!



இலங்கையில் தமிழர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மறுவாழ்வுப் பணிகள் போதுமானதாக இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்து மக்கள் கட்சி சார்பில் மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வல நிகழ்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ராஜபக்சே அரசை அகற்றுவதில் இலங்கை தமிழ் மக்கள் பெரும் பங்கு வகித்தனர் என்பதால், தற்போதுள்ள அதிபர் மைத்ரி பாலா ஸ்ரீசேனா, இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நடந்து கொள்வது இல்லை.

அதே நேரத்தில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுவாழ்வுப் பணிகள் போதுமானதாக இல்லை. தற்போதையை அரசும் இலங்கைத் தமிழர்களின் அனைத்து நலன்களையும் பூர்த்தி செய்துவிடவில்லை. ஆனால் ராஜபக்சே அரசில் இருந்தது போன்ற பாதுகாப்பற்றச் சூழல் தமிழ் மக்களுக்கு இல்லை. இலங்கையில் போர் முடிவுற்ற நிலையில், கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சந்தேகத்துக்குரிய வகையில் மரணம் அடைந்துள்ளனர். மேலும் பலர் இனம் தெரியாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறையில் விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இலங்கை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசிடம் வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து சிறையில் அவர்களுக்கு ஏதேனும் கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கையில் தமிழர்கள் பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் அமைக்கும் செயல் தொடர்ந்து வருகிறது. இதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பை தெரிவித்து வருகிறது என்றார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic