பக்ரீத் பண்டிகையின்போது விலங்குகளை பலியிடுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் பொது நலவழக்கு ஒன்றை தொடுத்துள்ளனர்.
இஸ்லாமிய சமூகத்தினரால் கொண்டாடப்படும் பக்ரீத் என்கிற தியாகத் திருநாளின்போது, ஒட்டகம், ஆடு, மாடு போன்ற விலங்குகளை பலியிடுவது வழக்கம். இதற்கு தடை விதிக்கக் கோரி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 7 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பக்ரீத் பண்டிகையின்போது சாலைகள் மற்றும் பொது இடங்களில் விலங்குகளை ஆண்டுதோறும் பலியிடுகின்றனர். மனிதத் தன்மையற்ற முறையில் விலங்குகளை பலியிடுவதைப் பார்ப்போருக்கு இது அறுவருப்பைத் தருகிறது. இதனால் சாலைகளில் விலங்குகளின் இரத்தம் தேங்குவதால் பொதுமக்கள் உணர்வுப்பூர்வமாக பாதிக்கப்படுகின்றனர்.
விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டமானது, மத ரீதியில் விலங்குகளைக் கொல்வதிலிருந்து விலக்கு அளித்திருந்தாலும், அவற்றை எந்த இடங்களில் எவ்வாறு பலியிடுவது என்பது போன்று அந்தச் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
எனவே பக்ரீத் பண்டிகையின்போது மதத்தின் பெயரில் காட்டுமிராண்டித்தனமாக விலங்குகளை பலியிடுவதை அரசமைப்புக்கு எதிரான செயலாக அறிவித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இவ்வழக்கில் உள்துறை, சட்டம் மற்றும் நீதி, சுற்றுச்சூழல் மற்றும் வனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சகங்கள், இந்திய விலங்குகள் நல வாரியம் ஆகியவற்றை பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

No comments:
Write comments