Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 7, 2016

நேதாஜி பயன்படுத்திய ஜெர்மன் நாட்டு கார்


சுதந்திர போராட்ட காலகட்டத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பயன்படுத்திய கார் மீட்கப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட காலகட்டத்தில் நேதாஜியை வெள்ளையர்கள் 1941ஆம் ஆண்டின் போது கைது செய்து வீட்டுக்காவலில் வைத்திருந்தனர். அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க பயன்படுத்தப்பட்ட காரை நேதாஜியின் குடும்பத்தினர் மீட்டுள்ளனர்.

ஜெர்மன் ஆட்டோ மொபைல் தயாரிப்பான அந்த ஆடி கார் தற்போது நேதாஜியின் இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை பொழிவுடன் மாற்றுவதற்காக அதற்கு பெயின்ட் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அந்த காரில் உள்ள பழைய பாகங்களை முடிந்த அளவு மாற்றி அதன் ஆயுளை நீட்டிப்பதற்கான வேலைகள் நடந்து வருகிறது. வரலாற்றில் இடம்பிடித்த அந்த காரை இன்னும் பல ஆண்டுகளுக்கு நல்ல முறையில் பராமரிக்க வேண்டுமென்பதற்காக பழுது பார்க்கும் பணி நடைபெறுவதாக நேதாஜியின் ஆராய்ச்சி கழகத்தின் செயலாளர் கார்த்திக் சக்ரவர்த்தி தெரிவித்தார்.

காரின் வேலைப்பாடுகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரை கொண்டு தான் நேதாஜி  கொல்கத்தாவிலிருந்து ஜார்கண்டிற்கு பயணம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic