Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 16, 2016

பெல்லட் துப்பாக்கி குறித்த விபரங்களை தர முடியாது - புனே தொழிற்சாலை



கஷ்மீரில் கலவரத்தில் ஈடுபடுவோரைக் கலைப்பதற்காக பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தும் காற்றழுத்த (பெல்லட்) துப்பாக்கிகளின் திறன் குறித்த விவரங்களை வெளியிட புனே ஆயுதத் தொழிற்சாலை மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து 'காமன்வெல்த் மனித உரிமை' என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த வெங்கடேஷ் நாயக் என்பவர் தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்திருந்த மனுவுக்கு, அந்தத் தொழிற்சாலை அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கஷ்மீரில் பயன்படுத்தப்படும் 12 துளை கொண்ட பெல்லட் துப்பாக்கியின் சுடு திறன் குறித்த விவரங்களை, பாதுகாப்பு காரணங்களால் வெளியிட முடியாது. மேலும் அவற்றில் பயன்படுத்தப்படும் ஈய ரவைகள், அவற்றின் விற்பனை ஆகியவை குறித்த விவரங்களையும் வெளியிட முடியாது. பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வியூகங்கள் குறித்த இரகசிய விவரங்களையும், வர்த்தக நம்பிக்கையைக் குலைக்கக் கூடிய விவரங்களையும் வெளியிடுவதிலிருந்து தகவலறியும் உரிமைச் சட்டம் விலக்கு அளித்துள்ளது என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரி நாடுகளிடமிருந்து இந்தியாவைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களைக் குறித்த விவரங்களை நாங்கள் கேட்கவில்லை. கலவரத்தில் ஈடுபடுபவர்களைக் கலைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சாதாரண ஆயுதம் குறித்த விவரங்களைத்தான் கோரினோம். ஆனால் அதற்கு துப்பாக்கித் தொழிற்சாலை அளித்துள்ள பதிலே, காற்றழுத்தத் துப்பாக்கியும், அதன் மூலம் சுடப்படும் ஈய ரவைகளும் மனிதர்களுக்கு எந்த அளவு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது என்றார் அவர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic