Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 4, 2016

வங்கதேசத்தில் ஜமாத்தே இஸ்லாமி தலைவர் தூக்கிலடப்பட்டார்..!


வங்கதேசத்தில் செயல்படும் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் மிர் காசிம் அலி நேற்று தூக்கிலிடப்பட்டார்.

கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த வங்கதேசம், பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெறுவதற்காக கடந்த 1971-ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தின்போது ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியினர், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தினர்.

ஆள் கடத்தல், சட்டவிரோதமாக சிறை வைத்தல், சித்ரவதை, பாலியல் பலாத்காரம், படுகொலை உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் அவர்கள் ஈடுபட்டதாக சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில், சுதந்திரப் போராட்டத்தின்போது ஜமாத் கட்சிக்கு பெருமளவில் நிதியுதவி அளித்து வந்த மிர் காசிம் அலி, போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்காக நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து அவர் டாக்கா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த மாதம் 30-ந் தேதி அவருடைய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. எனினும் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினால் தண்டனை குறைவதற்காக வாய்ப்புகள் இருந்ததாக கூறபப்டுகிறது. எனினும் தான் கருணை மனு அளிக்கப்போவதில்லை என மிர் காசிம் அலி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காசிம்பூர் சிறையில் நேற்று இரவு மிர் காசிம் அலி தூக்கிலிடப்பட்டார். போர் குற்றச்சாட்டின் பேரில் வங்கதேசத்தில் தூக்கிலிடப்படும் 6-வது தலைவர் மிர் காசிம் அலி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic