அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் கலால் துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதனின் பதவி பறிக்கப்பட்டது. அவர் கட்சித் தலைமைக்கு தெரியாமல் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் பதவியை இழந்ததாக கூறப்பட்டது.
தேர்தலிலும் அவர் வழக்கமாக போட்டியிடும் நத்தம் தொகுதியை தராமல் ஆத்துார் தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். எனினும் தேர்தலுக்குப் பின் அவருக்கு கட்சியின் அமைப்புச் செயலர் மற்றும் செய்தித் தொடர்பாளர் பதவிகள் கொடுக்கப்பட்டன.
இந்நிலையில், சில மாத இடைவெளிக்கு பின் நத்தம் விஸ்வநாதன் மற்றும் சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று, வருமான வரித்துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது.
சென்னை, அடையாறில் உள்ள நத்தம் விஸ்வநாதனின் வீடு மற்றும் உறவினர் வீடுகள், நத்தம் விஸ்வநாதனின் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம், வேம்பார்பட்டியில் உள்ள வீட்டிலும், நேற்று காலை துவங்கி விடிய விடிய நடந்த சோதனை இன்று அதிகாலையில் தான் நிறைவடைந்தது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Write comments