Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 13, 2016

பேரறிவாளன் மீது தாக்குதல்...!


வேலூர் மத்திய சிறையில் இருந்த ராஜீவ் கொலைக் குற்றவாளி பேரறிவாளன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் கைதியாக தண்டனை காலம் முடிந்தும் வேலூர் மத்திய சிறையில் இருக்கு பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை பற்றிய சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது.

அவர்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இதற்காக பல போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில், பல்வேறு அமைப்பினர் சார்பில் பேரணியாக தலமைச்செயலகம் சென்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம், எழுவரை விடுதலை செய்யக்கோரி கோரிக்கை மனு அளித்தனர். எழுவரை விடுதலை செய்ய மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படாமல் சிறையில் உள்ளனர். இதில் பேரறிவாளனுக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு அவர் அதற்காக சிகிச்சையும் எடுத்து வருகிறார்.

இந்நிலையில், இன்று வேலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதி ஒருவன் இரும்பு கம்பியால் பேரறிவாளன் கையில் தாக்கியதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த பேரறிவாளன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பேரறிவாளனுக்கு கையில் 6 தையல்கள் போடப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் தமிழக வாகணங்கள் தீவைக்கப்பட்டும், தமிழர்கள் தாக்கப்பட்டும் வரும் வேளையில், அதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆகவே அந்த பிரச்சினையை திசை திருப்புவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்று நடுநிலையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic