Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 18, 2016

முன்னாள் முதல்வருக்கு, இன்னாள் முதல்வர் கண்டிப்பு!


புதுச்சேரி முதல்வராக பதவியேற்ற நாராயணசாமி, பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, ‘இனி இந்த முதல்வர் பத்திரிகையாளர்களை வாரம், வாரம் சனிக்கிழமைதோறும் சந்திப்பேன்’ என்றார். 

அதன்படி தவறாமல் சனிக்கிழமைகளில் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார் நாராயணசாமி. நேற்று சட்டமன்றத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ‘கடந்த ஆட்சியில் கொள்ளைப்புறமாக வேலைக்கு வைத்த ஆட்களை, காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியான எங்கள் ஆட்சிதான் வெளியே அனுப்பியதாக தவறான கருத்துகளை பரப்பி வருகிறார் முன்னாள் முதல்வரும், அவரது ஆதரவாளர்களும். இனி இதுபோல், தவறாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம்தான், அனைத்துக்கட்சிகளின் புகார்களின் அடிப்படையில் சுமார் 3,000 ஊழியர்களை வெளியே அனுப்பியது. 

கடந்த ஆட்சியில் வேலைக்கு அமர்த்திய ஆட்கள், போலியான சான்றுகளை பெற்றும், தமிழ்நாட்டு ஆட்களை லஞ்சம் பெற்றுக்கொண்டும் அரசு வேலைக்கு அமர்த்தியுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. அதுக்கான விசாரணை விரைவில் நடக்கும்’ என்றார் காட்டமாக.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic