Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 5, 2016

பித்தவெடிப்பை போக்க எளிய வழி...!



பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்பு. இதனால் காலில் வலி ஏற்படுவதுடன் விருப்பமான காலனிகளையும் அணிய முடியாமல் போகிறது.

இறந்த செல்கள், உடலில் பெரும்பலான இடங்களில் வியர்வை மூலமாக வெளியேறுகின்றன. ஆனால் முகம், உதடு, பாதங்களில் அதிகமாய் வியர்க்காததால், அங்கேயே தங்கி சருமத்தை பாதிப்படைய வைத்துவிடும். எனவே முக்கியமாய் இந்த இடங்களில் ஸ்க்ரப் செய்வது மிகவும் அவசியமாகி விடுகிறது.

பாதங்களில் இறந்த செல்கள் மற்றும் கொழுப்பு படிவங்கள் தங்கி, கடினத்தன்மையை ஏற்படுத்தும். இவைகளை தினமும் குளிக்கும்போது நீக்கிவிட வேண்டும். இல்லையென்றால் வெடிப்பு ஏற்பட்டு, பாதத்தை அசிங்கமாக்கும்.

வலி உண்டாகும். இதற்கான இந்த ஸ்க்ரப் வாரம் மூன்று முறை உபயோகித்தால் பாதத்தில் வெடிப்பு மறைந்து பட்டுப் போன்று மென்மையான பாதம் கிடைக்கும்.

தேவையானவை :

உப்பு - 5 டீஸ்பூன்
பாதாம் எண்ணெய் - கால் கப்
லாவெண்டர் எண்ணெய் - 3 துளிகள்.

இவற்றை நன்றாக கலக்கி, பாதங்களில் தேய்த்து, 20 நிமிடங்கள் ஊற விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பாதங்களில் வெடிப்பு மறைந்து மென்மையாகும்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic